பல்லடம் அருகே நல்லாகவுண்டம்பாளையத்தில் கழிவுபஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கழிவுப்பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.
பல்லடம் அருகே நல்லாகவுண்டம்பாளையத்தில் கழிவுபஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கழிவுப்பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.
பல்லடம்,
பல்லடம் அருகே நல்லாகவுண்டம்பாளையத்தில் கழிவுபஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கழிவுப்பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.
தீப்பிடித்தது
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் நல்லா கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன்(வயது 40), தன்ராஜ்(43), சேகர்(45) இவர்களுக்குச் சொந்தமான கழிவுப்பஞ்சு அரவை ஆலை அதே பகுதியில் இயங்கி வருகிறது.
இதில் உள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது அரவை எந்திரத்தில் இருந்து ஏற்பட்ட தீப்பொறி கழிவுப்பஞ்சுகளில் பட்டு மளமளவென பற்றி எரியத்தொடங்கியது.
ரூ.1 லட்சம் பொருட்கள்
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து உடனே பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கழிவுப்பஞ்சு மூட்டைகள் அரவை எந்திரங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story