அவினாசி லிங்கேஸ்வரர்கோவில் அருகே புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க நடந்த முயற்சியை அதிகாரிகள் தடுத்து நிறுனத்தினர்.
அவினாசி லிங்கேஸ்வரர்கோவில் அருகே புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க நடந்த முயற்சியை அதிகாரிகள் தடுத்து நிறுனத்தினர்.
அவினாசி,
அவினாசி லிங்கேஸ்வரர்கோவில் அருகே புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க நடந்த முயற்சியை அதிகாரிகள் தடுத்து நிறுனத்தினர்.
சுத்தம் செய்யும் பணி
அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் அருகே உள்ள வண்டிபேட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பணி மேற்கொண்டுள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு நேற்று முன்தினம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மற்றொரு சமூகத்தினர் அங்கு வந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் அந்த பகுதியில் காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து அனுமதி இன்றி இங்கு யாரும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று தடுத்தனர்.
வாக்குவாதம்
சம்மந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் நாங்கள் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இந்த இடத்தில் பந்தல் அமைத்துபொதுமக்களுக்குதண்ணீர், மற்றும் நீர் மோர் வழங்கி வருகிறோம். அதற்காகத்தான் இந்த ஆண்டு இந்த இடத்தை சமன் செய்துதற்காலிக டென்ட் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும், ஏற்கனவே ஒரு தரப்பினர் இந்த இடத்திற்கு அருகில் கட்டிட பணிகள் செய்து கொண்டிருக்கும் வேளையில் எங்களை மட்டும் தடுப்பது எந்த விதத்தில் நியாயம் நாங்கள் பொதுமக்கள் சேவை செய்யத்தான் இதை பயன்படுத்துகிறோம்.வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பணிகள் நிறுத்தி வைப்பு
அப்போது வருவாய் துறையினர் கூறுகையில் நீங்கள் முறையாக தாசில்தாரிடம் அனுமதி பெற்று அதன் பிறகு உங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். அதுவரை இங்குயாரும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். இதையடுத்து அங்கே நடைபெற்ற பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டடது. இவ்வளவு காலம் கவனிப்பாரற்று விட்டுவிட்டனர். அப்போதே வருவாய்த்துறையினர் இந்த இடத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைத்து வருவாய்த்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அப்படியே விட்டதால்தான் பலரும் சொந்தம் கொண்டாடி இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய முன்வருகின்றனர் என்றனர். இந்த சம்பவத்தால் அவினாசியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story