திருக்கோவிலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்


திருக்கோவிலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 March 2021 11:24 PM IST (Updated: 17 March 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே திருவெண்ணெய்நல்லூர்-கடலூர் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 320 இருந்தது. விசாரணையில் மினி லாரியில் வந்தவர் சின்னசாமி கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் விஷ்ணு(வயது 25) என்பதும் பெட்ரோல்பங்க் ஊழியரான இவர் வசூலான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு சென்றதும், ஆனால் பணத்துக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை திருக்கோவிலூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசங்கரனிடம் ஒப்படைத்தனர். அப்போது சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கண்ணன் உடன் இருந்தார்.

Next Story