தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. சட்டங்கள் ரத்து- உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. சட்டங்கள் ரத்து- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 18 March 2021 12:07 AM IST (Updated: 18 March 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. சட்டங்கள் ரத்து செய்யப்படும் என வாணியம்பாடியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்்.

வாணியம்பாடி

தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. சட்டங்கள் ரத்து செய்யப்படும் என வாணியம்பாடியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்்.

தேர்தல் பிரசாரம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தி.மு.க.இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

வாணியம்பாடி பஸ் நிலையத்தில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

மக்கள் வரிப்பணத்தில் ஊர் சுற்றவே ரூ,8 ஆயிரம் கோடியில் பிரதமர் மோடி 2 விமானங்களை வாங்கியுள்ளார்.

ரூ,.1000 கோடியில் புதிய பாராளுமன்றத்தை திறக்க திட்டம் வைத்துள்ளார் ஆனால் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் நிதி பற்றாக்குறை என்று கூறி தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார்.

‘நீட்’ தேர்வு ரத்து

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான். 

தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு ‘நீட்’ தேர்வை அனுமதித்தார்கள். 

இந்த தேர்வினால் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது செவிலியர் படிப்பிற்கும் ‘நீட்’ தேர்வு கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்படும். அதேபோல் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி சட்டங்களும் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் நமது தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். 

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்குமே தெரியாது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 80 நாட்கள் இருந்தபோதிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படவில்லை என நம்ப முடியாத ஒரு காரணத்தை கூறினார்கள். இதிலிருந்தே அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தெரிகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story