ஒரேநாளில் 676 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரேநாளில் 676 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர்
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அதில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வாக பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், முதியோர்கள் ஆர்வத்துடன் வந்து போட்டுக் கொள்கின்றனர். அந்தவகையில் நேற்று மட்டும் ஒரேநாளில் பெரம்பலூரில் மொத்தம் 639 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 37 பேருக்கும் என மொத்தம் 676 பேருக்கு போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 13,258 பேருக்கும், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி இதுவரை 178 பேருக்கும் என மொத்தம் 13,436 பேருக்கு போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. தடுப்பூசி போட்டு கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று மருத்துவ வட்டாரத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story