தேவர் சிலை அகற்றப்பட்ட கிராமத்துக்கு வந்த கருணாஸ்


தேவர் சிலை அகற்றப்பட்ட கிராமத்துக்கு வந்த கருணாஸ்
x
தினத்தந்தி 18 March 2021 1:46 AM IST (Updated: 18 March 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே தேவர் சிலை அகற்றப்பட்ட கிராமத்துக்கு வந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொட்டாம்பட்டி,
மார்ச்.
கொட்டாம்பட்டி அருகே தேவர் சிலை அகற்றப்பட்ட கிராமத்துக்கு வந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் மீது கல்வீச்சு
கொட்டாம்பட்டி அருகே வெள்ளாளப்பட்டி புதூரில் புதிதாக வைக்கப்பட்ட தேவர் சிலையை போலீசார் அகற்றினர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள் வீசப்பட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர்.
அங்கு பதற்றம் நிலவியதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேவர் சிலை அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட வெள்ளாளப்பட்டி புதூர் கிராமத்துக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் வந்தார்.
வாக்குவாதம்
அப்போது போலீசார் ஊர் எல்லையிலேயே அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் கோபம் அடைந்த கருணாஸ் மற்ற அரசியல் கட்சியினரை கிராமத்துக்குள் அனுமதிக்கும்போது தன்னை மட்டும் அனுமதிக்க மறுப்பது ஏன் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அப்பகுதி மக்களை கருணாஸ் சந்தித்து பேசினார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அனுமதியில்லாமல் சிலை வைக்கப்பட்டிருந்தாலும் அதனை அகற்றிய முறை சரியானது அல்ல. முறையாக கலந்து பேசி சிலையை பாதுகாப்பாக அகற்றி இருக்கலாம். அதை விடுத்து பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கியுள்ளனர். மேலும் பொய் வழக்கு பதிவு செய்து கிராம மக்களை அச்சுறுத்துகின்றனர். தேவர் சிலையை எந்திரம் மூலம் அகற்றியது கண்டனத்துக்குரியது. முக்குலத்தோருக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஆல் அவுட் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story