ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
x
தினத்தந்தி 18 March 2021 1:48 AM IST (Updated: 18 March 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா 
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தொற்று பரவுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் நேற்று காலை மாநகராட்சி பணியாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ஈரோடு பஸ் நிலையத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பஸ்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாமல் பஸ்களில் அனுமதித்ததற்காக பஸ் கண்டக்டர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள்.
கிருமி நாசினி
தனிநபர் இடைவெளி, உடல் வெப்பநிலை பரிசோதனை போன்றவற்றை மீண்டும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ஈரோடு கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story