தேவனாம்பட்டினத்தில் 101 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
101 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கடலூர்,
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் இனப்பெருக்கத்திற்காக ஆலிவ் ரெட்லி வகை கடல் ஆமைகள் வந்து செல்கின்றன. இந்த ஆமைகள் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதம் வரை கடற்கரையோரம் வந்து முட்டையிடும். பின்னர் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை குஞ்சுகள் பொறிக்கும். இந்த முட்டைகளை வனத்துறையினர் பாதுகாத்து குஞ்சுகள் பொரித்தவுடன் கடலில் கொண்டு சென்று விடுகின்றனர்.
அந்த வகையில் வன பாதுகாவலர் பெரியசாமி அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட வன அலுவலர் செல்வம் தலைமையில் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது மற்றும் வனவர்கள் கடந்த 2 மாதமாக கடலூர் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரித்தனர். மொத்தம் 3 ஆயிரம் மூட்டைகளை சேகரித்து, அதனை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பராமரித்தனர். இதில் முதற்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொரித்த 113 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த நிலையில் மேலும் 101 ஆமை குஞ்சுகள் பொரித்தன. இதையடுத்து வனத்துறையினர் நேற்று காலை அந்த 101 ஆமை குஞ்சுகளையும் கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் பாதுகாப்பாக விட்டனர்.
Related Tags :
Next Story