ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி; 2 பேர் கைது


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2021 2:19 AM IST (Updated: 18 March 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 58). இவர் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ்சில் பயணம் செய்தார். பாளையங்கோட்டையை கடந்து பஸ் சென்றபோது ராஜம்மா அருகில் 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நைசாக ராஜம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் கூச்சலிட்டார் உடனடியாக சக பயணிகள் அந்த 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிவந்திபட்டி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அய்யா துரை தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அசோக்நகரை சேர்ந்த ஜோதி (25), சாந்தி (27) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story