ஓமலூரில் மூடி வைத்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததால் பரபரப்பு


ஓமலூரில் மூடி வைத்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 March 2021 4:10 AM IST (Updated: 18 March 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூரில் மூடி வைத்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்:
ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலை, சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பிளாஸ்டிக் பேப்பரால் மூடப்பட்டிருந்தது. நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மணி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் யாரோ சிலர் ஓமலூர் பஸ் நிலையத்தில் மூடி வைத்திருந்த அண்ணா சிலையின் மீது இருந்த பேப்பரை கழுத்து வரை பிரித்து அகற்றி விட்டு மாலை போட்டு சென்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிளாஸ்டிக் பேப்பரினை பிரித்து சிலைக்கு மாலையிட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story