புளியரை சோதனைச்சாவடியில் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்


புளியரை சோதனைச்சாவடியில் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 March 2021 4:27 AM IST (Updated: 18 March 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

புளியரை சோதனைச்சாவடியில் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கோட்டை:
செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள புளியரை சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது கேரள மாநிலம் கோட்டைவாசலில் இருந்து வந்த அரசு பஸ்சில் இருந்த ஒருவரிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சோதனை செய்தனர். இதில் சிவகிரி அருகே உள்ள ராயகிரி காமராஜர் தெருவை சேர்ந்த கணபதியப்பன் (வயது 65) என்பதும், தடை செய்யப்பட்ட 720 கேரளா லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story