திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடியில் தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு


திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடியில் தி.மு.க. வேட்பாளர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 18 March 2021 8:41 AM IST (Updated: 18 March 2021 8:41 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடியில் தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

திருவெறும்பூர், 

திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து நேற்று திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகரத்தில் உள்ள வார்டு 1 முதல் 6 வரையுள்ள பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து “உதயசூரியன் சின்னத்திற்கு“ வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் நகர செயலாளர் இ.காயாம்பு, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் பொன் முருகேசன்,  ம.தி.மு.க.வை சேர்ந்த பாலுசாமி, திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திலீபன், ரமேஷ் உள்பட மதசார்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story