ஸ்ரீரங்கம் தொகுதி கோப்பு, குழுமணியில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு
ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள குழுமணி மற்றும் கோப்பு போன்ற பகுதிகளில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க சென்றார்.
ஜீயபுரம்,
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள கட்சி முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று மாலை ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள குழுமணி மற்றும் கோப்பு போன்ற பகுதிகளில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க சென்றார். அப்போது அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு கோப்பு, குழுமணி பகுதிகளில் வீடு, வீடாக சென்று தமிழக அரசு செய்துள்ள பல்வேறு அரிய சாதனைகளை எடுத்துக்கூறி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதைதொடர்ந்து திருச்சி மாநகர் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் எஸ்.வி.ஆர்.ரவி சங்கர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னதாக அவருக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story