எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்


எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 18 March 2021 8:42 PM GMT (Updated: 18 March 2021 8:42 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

பெரம்பலூர்:
எல்.ஐ.சி. பங்கை தனியாருக்கு மத்திய அரசு விற்கக்கூடாது. எல்.ஐ.சி.யில் அந்நிய முதலீடு 19 சதவீதமாக இருந்ததை, 74 சதவீதமாக உயர்த்தியதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர்த்தாமல் 43 மாதங்களாக பேச்சுவார்த்தையில் உள்ளது. அதற்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெங்கடேசபுரத்தில் உள்ள பெரம்பலூர் எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் பணிபுரியும் 37 ஊழியர்கள் நேற்று பணிக்கு வராததால், அந்த அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் வெங்கடசேபுரத்தில் உள்ள மற்றொரு எல்.ஐ.சி. கிளை அலுவலகத்திற்கு ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால், அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதனால் எல்.ஐ.சி. வாடிக்கையாளர்கள் தங்களது பாலிசிக்கான பிரீமிய தொகையை கட்ட முடியாமல் தவித்தனர்.

Next Story