தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை அதிக அளவில் வழங்கியது தி.மு.க. தான் இ.பெரியசாமி பேச்சு


நால்ரோடு சுள்ளெறும்பு பகுதியில் இ.பெரியசாமி பிரசாரம் செய்த போது எடுத்தபடம்
x
நால்ரோடு சுள்ளெறும்பு பகுதியில் இ.பெரியசாமி பிரசாரம் செய்த போது எடுத்தபடம்
தினத்தந்தி 19 March 2021 7:33 AM GMT (Updated: 19 March 2021 7:33 AM GMT)

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை அதிக அளவில் வழங்கியது தி.மு.க. தான் இ.பெரியசாமி பேச்சு

கன்னிவாடி,
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை தி.மு.க. ஆட்சியில் தான் அதிக அளவில் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்

இ.பெரியசாமி
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆத்தூர் தொகுதிக்கு உட் பட்ட 44 கிராமங் களில் தி.மு.க. அரசு வந்தவுடன் என்னென்ன செய்வோம் என முன்னாள் அமைச்சரும், தி.மு.க. வேட்பாளருமான இ.பெரியசாமி எடுத்து கூறி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.  

முதியோர் உதவிதொகை...
அதன்படி ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட முருநெல்லிக் கோட்டை ஊராட்சி, கெண்டைய கவுண்டனூரில் இருந்து திறந்த ஜீப்பில் நின்று தி.மு.க. உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்து அவர் பேசியதாவது:-

தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்தபோது தான் தமிழகத் தில் அதிக மானோருக்கு முதியோர்பென்சன் வழங்கி னோம்.  அ.தி.மு.க. அரசு வந்தவுடன் முதியோர் பென்சன் நிறுத்தப்பட் டது.வயதானவர்கள்படும் துன்பம் எனக்கு புரிகிறது.

ஆத்தூர் தொகுதி யில் அதுவும் ரெட்டியார் சத்திரம் பகுதியில் தார்சாலை புதுப்பிக்கப்படவில்லை. நடந்து செல்லமுடியாத சாலையாக உள்ளது. தி.மு.க. அரசு வந்தவுடன் நம் பகுதியில் உள்ள முதியோர் அனைவருக்கும் ரூ. 1500 மணியாடர் மூலம் வீடு தேடி வரும். எங்கும் அலைய வேண்டாம். 

தி.மு.க. அரசு வந்தவுடன் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். சாலை பணியாளர்கள், கோயில்களில் வேலை, அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வழங்கப்படும்
இவ்வாறு இ.பெரியசாமி  கூறினார்.

கலந்து கொண்டவர்கள்
உதயசூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களித்து வெற்றி தேடித்தரவேண்டும் என கூறினார். தொடர்ந்து ஆசாரிபுதூர், சாலையூர், நால்ரோடு, சுக்காம்பட்டி, காமாட்சிபுரம், ஜி.நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.  முன்னதாக வேட்பாளருக்கு அனைத்து கிராமங்களிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஆசாரிபுதூரில் இ.பெரியசாமி வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்

ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி, மணி, ஒன்றியகுழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி, தமிழ்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, ரெட்டியார் சத்திரம் ஒன்றியக்குழு முன் னாள் தலைவர் சத்தியமூர்த்தி மாவட்டக் கவுன்சிலர் சுப்புலெட்சுமி, கொத்தப்புள்ளி ஊராட்சி தலைவர் அன்பரசு, முருநெல்லிக்கோட்டை ஊராட்சி தலைவர் சின்னு (எ) முருகன், கொத்தப்புள்ளி ஊராட்சி துணைத்தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் விவேகானந்தன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் குமாரலிங்கம், ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையன், அம்பை ரவி, எல்லை ராமகிருஷ்ணன், இளைஞர் அணி பார்த்த சாரதி, மாணவர் அணி அமைப்பாளர் செல்வராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் கோயில் கண்ணன், புதுக்கோட்டை முன்னாள் தலைவர் பன்னீர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story