நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்


நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 March 2021 9:54 PM GMT (Updated: 19 March 2021 9:54 PM GMT)

நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.

நெல்லை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் மனுதாக்கல் முடிவடைந்தது. இன்று (சனிக்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, நெல்லை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது. 

இந்த நிலையில் அங்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடுப்பு சுவர் ஏற்படுத்துதல், உடைந்து கிடக்கின்ற கட்டிடங்களை சரிசெய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. மேலும் வாக்குப்பெட்டிகள் வைப்பதற்கான அறைகள், ஒட்டுமொத்த பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற அறைகள் ஆகியவற்றை சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் பணியாளர்களுக்கும், முகவர்களுக்கும் இடையே தடுப்பு சுவர் மற்றும் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

Next Story