கடையநல்லூர் அருகே விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


கடையநல்லூர் அருகே விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 20 March 2021 9:22 PM GMT (Updated: 20 March 2021 9:22 PM GMT)

கடையநல்லூர் அருகே விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது.

அச்சன்புதூர், மார்ச்.21-
கடையநல்லூர் அருகே வடகரை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அடவிநயினார் அணைக்கட்டு அருகில் மேக்கரை கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாய நிலங்களில் மா, வாழை, தென்னை, நெல், நெல்லி, இலவம் பஞ்சு உள்ளிட்டவை பயிரிடப்பட்டு உள்ளன. இந்த விளை நிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 

நேற்று முன்தினம் வடகரையை சேர்ந்த அப்துல் அலி என்பவருக்கு ெசாந்தமான தோட்டத்தில் புகுந்த யானைகள், அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட இலவம் பஞ்சு மரங்களை சேதப்படுத்தி உள்ளன. எனவே காட்டு யானைகள் விளைநிலத்தில் புகாதவாறு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 



Next Story