மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா


மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 20 March 2021 10:06 PM GMT (Updated: 2021-03-21T03:36:43+05:30)

சேத்தூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தளவாய்புரம், 
சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். 
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் பங்குனி மாத பூக்குழி திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதில் கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயகுமார், செயலாளர் ஜெயராம், பொருளாளர் கருப்பையா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா வருகிற 28-ந் தேதி  மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.Next Story