நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நள்ளிரவு வரை காத்திருந்த வேட்பாளர்கள்


நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நள்ளிரவு வரை காத்திருந்த வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 20 March 2021 10:57 PM GMT (Updated: 2021-03-21T04:27:51+05:30)

நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நள்ளிரவு வரை வேட்பாளர்கள் காத்திருந்தனர்.

நெல்லை:
நெல்லை சட்டமன்ற தொகுதி வேட்புமனு பரிசீலனையில் அ.ம.மு.க. வேட்பாளர் பால் கண்ணன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் உள்ளிட்டோர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். 

இந்த நிலையில் பால்கண்ணன், அழகேசன் மற்றும் இவர்களுடைய ஆதரவாளர்கள் நேற்று இரவு நீண்ட நேரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். தங்களது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியும், நிராகரிப்புக்கான காரணத்தை எழுத்து மூலம் அளிக்குமாறும் கேட்டு அவர்கள் தொடர்ந்து நின்றிருந்தனர். இதனால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகம் இரவில் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story