புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2021 9:35 AM GMT (Updated: 2021-03-21T15:05:11+05:30)

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

கோவை

கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசார் குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக கோவையை சேர்ந்த நவுசத் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பாக்கெட் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட் டன.

கோவை கிராஸ்கட் சாலையில் காட்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்றதாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்கலி (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

அவரிடம் இருந்து 40 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story