திருவள்ளூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு


திருவள்ளூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 21 March 2021 12:26 PM GMT (Updated: 2021-03-21T17:56:28+05:30)

திருவள்ளூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து அவர் தலைமையில் கட்சியினர் நேற்று முன்தினம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஆவடி ஜங்ஷன் வரை தொற்றுநோய் பரவும் விதமாக சாலையில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் நின்று கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் திருவள்ளூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.ரமணா உள்ளிட்ட கட்சியினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அதேபோல திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து காமராஜர் சிலை வரை கொரோனா வைரஸ் தொற்று பரவும் விதமாக ஒன்றுகூடி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அ.ம.மு.க. வேட்பாளர் குரு உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story