சிமெண்டு மூடைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது


சிமெண்டு மூடைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 21 March 2021 6:16 PM GMT (Updated: 21 March 2021 6:16 PM GMT)

புழுதிபட்டி அருகே சிமெண்டு மூடைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

எஸ்.புதூர்,

புழுதிபட்டி அருகே சிமெண்டு மூடைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

லாரி கவிழ்ந்தது

பெரம்பலூரில் இருந்து சுமார் 600 சிமெண்டு மூடைகளுடன் லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனை நிலக்கோட்டை அருகே விலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயபிரகாஷ் (வயது 39) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புழுதிபட்டி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சாலையில் சிதறிய சிமெண்டு மூடைகள்

இந்த விபத்தில் லாரியில் இருந்த சிமெண்டு மூடைகள் சாலையில் சிதறி கிடந்தன. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் புழுதிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சாலையில் சிதறி கிடந்த சிமெண்டு மூடைகள் மாற்று லாரியில் ஏற்றப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்துக்குள்ளான லாரி கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story