தமிழக அணியில் பங்கேற்ற சிவகங்கை மாணவிக்கு பாராட்டு


தமிழக அணியில் பங்கேற்ற சிவகங்கை மாணவிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 21 March 2021 6:32 PM GMT (Updated: 21 March 2021 6:32 PM GMT)

தேசிய அளவிலான ஆக்கி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்ற சிவகங்கை மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை,

தேசிய அளவிலான ஆக்கி போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றது.இதில் சப்-ஜூனியர் பிரிவில் தமிழக அணியில் சிவகங்கை விவேகானந்தா உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி வைரவி கலந்துகொண்டு விளையாடினார். இதையொட்டி தமிழக அணியில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவி வைரவிக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தாளாளர் சங்கரன் சாதனை படைத்த மாணவி வைரவிக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த ஆக்கி சங்க செயலாளர் தியாக பூமி,  பயிற்சியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story