மாவட்ட செய்திகள்

குமரியில் 86 பேருக்கு கொரோனா சிகிச்சை + "||" + Corona treatment

குமரியில் 86 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமரியில் 86 பேருக்கு கொரோனா சிகிச்சை
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மக்கள் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுவதாலும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கைவிட்டதாலும் பாதிப்பு உயர தொடங்கி இருக்கிறது. நாகர்கோவிலில் ஏற்கனவே கல்லூரி முதல்வர், பேராசிரியர், பள்ளி மாணவர், வங்கி அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளி மற்றும் வங்கியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் பழகியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு நாளில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
86 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 86 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறார்கள். 13 பேர் தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு குமரி மாவட்ட எல்லை பகுதியில் 3 இடங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதோடு முக கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பறக்கும் படையினர் அபராதம் 
நாகர்கோவில் மாநகராட்சியில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பறக்கும் படையினரும் அபராதம் விதிக்க தொடங்கி இருக்கிறார்கள். தினமும் நடைபெறும் வாகன சோதனையில் பெரும்பாலும் முக கவசம் அணியாதது தொடர்பாக அபராதம் விதிப்பதே அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்காக அரசு, மாநகராட்சி பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு தயார் நிலையில் வைத்திருக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
2. கொரோனா சிகிச்சையால் அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறோம்., கொரோனா சிகிச்சையால் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீது புதிய நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது என்று செவிலியர்கள் தெரிவித்தனர்.
3. கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண பொருட்கள் 31 மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு
கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண பொருட்கள் 31 மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
4. கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டம்
கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை விரைவில் அனுப்ப இங்கிலாந்து அர்சு திட்டமிட்டுள்ளது.
5. கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க வேண்டுகோள்
கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.