ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டிக்கு ஆதரவாக கே.என்.நேரு பிரசாரம்


ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர்  பழனியாண்டிக்கு ஆதரவாக கே.என்.நேரு பிரசாரம்
x
தினத்தந்தி 22 March 2021 11:28 AM IST (Updated: 22 March 2021 11:28 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டிக்கு ஆதரவாக கே.என்.நேரு பிரசாரம் செய்து வருகிறார்.

சோமரசம்பேட்டை, 

ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி பிரசாரத்தை தொடங்கி வைத்து தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு மக்களிடம் பேசுகையில், தி.மு.க. ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும். ஸ்ரீரங்கம் தொகுதி எப்போதெல்லாம் வெற்றி பெறுகிறதோ அப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சி அமைக்கும். 

ஸ்ரீரங்கம் தொகுதியை பொறுத்தவரை அமைச்சர் வளர்மதி எதுவும் வளர்ச்சி திட்டங்கள் செய்யவில்லை. இப்போது தி.மு.க. சார்பில் போட்டியிடும் பழனியாண்டி ஒன்றிய செயலாளராக இருந்து கழக பணியாற்றி விட்டு இப்போது மக்கள் பணி செய்ய வருகிறார். 

ஒன்றிய செயலாளராக இருந்தபோது இந்த பகுதியில் உள்ள பல பேரை முன்னேற்றி இருக்கிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும், அவரால் முன்னேறியவர்கள் ஏராளம்.  அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர், நான் மற்றும் தோழமை கட்சி தலைவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம், இதை நான் தேர்தலுக்காக கூறுவதாக நீங்கள் எண்ண வேண்டாம். 

இந்த வயலூர் சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக காணப்படுகிறது. பழனியாண்டி வெற்றி பெற்றவுடன் இந்த சாலையை 60 அடி சாலையாக மாற்றி எந்த நெரிசலும் இல்லாமல் மாற்றிக் காட்டுவோம் என்பதை இந்த தருணத்திலே நான் கூறிக் கொள்கிறேன் என்று கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story