தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் - அர.சக்கரபாணி உறுதி


தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் - அர.சக்கரபாணி உறுதி
x
தினத்தந்தி 22 March 2021 2:52 PM IST (Updated: 22 March 2021 2:52 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சி அமைந்த வுடன் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அர.சக்கரபாணி உறுதி கூறினார் .

ஒட்டன்சத்திரம், 

ஒட்டன்சத்திரம் தொகுதிக் குட்பட்ட தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் அர.சக்கரபாணி கிராமம், கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூலாம்பட்டி, மரிசிலம்பு, மார்கண்டாபுரம், புளி யம்பட்டி, வில்வாதம்பட்டி, தும்பலப்பட்டி கந்தப்ப கவுண்டன்வலசு, தொப்பம் பட்டி , நால்ரோடு, பெரிச்சி பாளையம் , குமாரபாளையம், முத்துநாயக்கன்பட்டி, வயலூர், போதுப்பட்டி, கொழுமம் கொண்டான், மேல்கரைபட்டி ஆகிய ஊர்களில் காலை முதல் இரவு வரை வாக்குகள் சேகரித்தார்.
ஐந்து முறை என்னை தொடர்ந்து தேர்வு செய்த பொதுமக்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்பொழுது 6&வது முறையாக தி.மு.க.வில் மீண்டும் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுத்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதிக் காக மக்கள்தொகை அடிப் படையில் ஒட்டன்சத்திரம் ஒன்றியம், தொப்பம்பட்டி ஒன்றியம், ஒட்டன்சத்திரம் நகரம், கீரனூர் பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு குடி நீர் வாரியத்தின் மூலம் மேல் நிலைத் தொட்டிகள்  கட்டி குடிநீர் பிரச்சினை  தீர்க்கப்பட்டது. 

கீரனூர் பேரூராட்சி கருங்குளம் நீர்தேக்கத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து மிகப்பெரிய திறந்தவெளி கிணறு வெட்டப்பட்டு பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. தும்பலப்பட்டி ஊராட்சிக் கும்,  தொப்பம்பட்டி ஊராட்சி க்கும் சண்முகநதியில் இருந்து இரண்டு திறந்த வெளி கிணறுகள் வெட்டி தனித்தனியாக குடிநீர் திட்டம் கொடுக்கப்பட்டது. தாழையூத்து ஊராட்சிக்கு மானூர்பெருவுடையார் கோவில் அருகில் திறந்தவெளிக் கிணறு அமைத்து குடிநீர் திட்டம் வழங்கப்பட்டது .

வாகரையில் மக்காச் சோளம் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. கொத்த யத்தில் 12 கோடி செலவில் நல்லதங்காள் அணைக்கட்டு திட்டம் தொடங்கப்பட்டது. மேலும்  கீரனூர், கள்ளி மந்தயம்,  கொன்றங்கி, கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி சொந்த கட்டிடம் கட்டப் பட்டது. தொப்பம்பட்டி, கொக்கரக்கள்வலசு ,தாழை யூத்து ஆகிய ஊர்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கீரனூர் பேரூராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் 200 பேருக்கு ரூ.3 கோடி செலவில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலமாக வீடுகள் கட்டி கொடுக்கப் பட்டுள்ளது. வாகரை சின்னக்காம்பட்டி, சிந்தல வாடம்பட்டி ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைத்து தரப்பட்டது, இப்படி தொப்பம்பட்டி ஒன்றியத்தில் எண்ணற்ற திட்டங்களை கடந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றியுள்ளோம்.

மேலும் வரும் ஆட்சிக்காலத்தில் விடுபட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என உறுதி கூறுகிறேன். தி.மு.க. ஆட்சி ஏற்றவுடன் கொத்தையம் ஊராட்சியில் பல்கலைக்கழகம் அமைக் கப்படும் என்றும் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ரூ. 530கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு ஆட்சி அமைந்தவுடன் வேலை வழங்கப்படும் என்றார். 

தொகுதியில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவ சாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றார். அனைத்து மகளிருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இத்தொகுதியில் அனைத்து மக்களின் பிரச்சி னைகளையும் உடனுக்குடன் தீர்க்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். பிரசாரத்தின் போது மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story