காரிமங்கலம் அருகே காதல் தொல்லையால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; என்ஜினீயர் கைது; நண்பர்களுக்கு வலைவீச்சு
காரிமங்கலம் அருகே காதல் தொல்லையால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே காதல் தொல்லையால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நர்சிங் மாணவி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை ஊராட்சி கிரைகொடஅள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் லிஷாலினி (வயது 19). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஊர்கவுண்டர் கொட்டாயை சேர்ந்த என்ஜினீயர் தவமணி (27) என்பவர் மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவி கல்லூரிக்கு செல்லும் போதும், வரும்போதும் காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் என்ஜினீயர் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
மேலும் தவமணி, தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உன்னை வாழ விடமாட்டேன் என்று மாணவியை செல்போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தவமணியை பலமுறை எச்சரித்தும், அவர் அதை பொருட்படுத்தவில்லை. நேற்று முன்தினம் தவமணி, அவரது நண்பர்களுடன் மாணவியின் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை கிருஷ்ணன் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
என்ஜினீயர் கைது
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் தவமணியை கைது செய்தனர். மேலும் அவருடைய நண்பர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காதல் தொல்லையால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.
Related Tags :
Next Story