நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு


நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
x

நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

கோவை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனுதாக்கல்செய்தார். 

இந்த வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் அவர் போட்டியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறியதாவது

சி.ஏ.ஏ., நீட் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். இந்தநிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தேன். நான் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தேன். 

நான் எங்கு சென்றாலும், இந்த தொகுதியில் போட்டியிட எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? என்று கேட்கிறார்கள். 10 பேரை சந்தித்தால் 8 பேர் இந்த கேள்வியை கேட்கிறார்கள். 

இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இதனால் தொண்டாமுத்தூர் தொகுதியில் நான் நிற்கவில்லை. விலகுகிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story