சூட்டிங்மட்டத்தில் மரக்கன்று நடும் விழா


சூட்டிங்மட்டத்தில் மரக்கன்று நடும் விழா
x

சூட்டிங்மட்டத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

ஊட்டி

சர்வதேச காடுகள் தினம் ஆண்டுதோறும் மார்ச் 21-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வனத்துறை சார்பில், சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஊட்டி அருகே சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் நேற்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட வன அதிகாரி குருசாமி தலைமை தாங்கினார். அந்நிய தாவரங்களான சீகை, கற்பூர மரங்களை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்ய ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 

தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இயற்கை வளம் பெருகவும், மழை பெய்யவும் தோடர் இன பாடல்களை பாடியும், மரம் வளர்ப்பு, காடுகளின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 96 சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. 

இதேபோல பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் பகுதியில் வனத்துறை சார்பில் வனநாள் கொண்டாடப்பட்டது. வனச்சரகர் கலைவேந்தன் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். நிகழ்ச்சியில் வனவர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story