வெண்ணந்தூர் அருகே மூதாட்டி வீடு தீயில் எரிந்து சேதம்


வெண்ணந்தூர் அருகே மூதாட்டி வீடு தீயில் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 22 March 2021 3:41 PM IST (Updated: 22 March 2021 3:41 PM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் அருகே மூதாட்டி வீடு தீயில் எரிந்து சேதம்

வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் ஊராட்சிக்குட்பட்ட வடுகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திம்மாசி. இவருடைய மனைவி கமலா (வயது 62). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பீரோ, கட்டில் மற்றும் இதர பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
=====

Next Story