மீன் பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து பரிதாபம்; ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு


மீன் பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து பரிதாபம்; ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 22 March 2021 4:43 PM IST (Updated: 22 March 2021 4:43 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் மீன் பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ஏலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 25). இவர் திருவள்ளூரை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சவுமியா (வயது 22) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான வினோத்குமார், சரத்குமார் ஆகியோருடன் ஏலம்பாக்கம் ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது அவர் தண்ணீரில் இறங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஆழமான பகுதியில் தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மப்பேடு போலீசார் இறந்த ஆனந்தராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story