வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் குறும்படம்-கலெக்டர் வெளியிட்டார்


வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் குறும்படம்-கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 22 March 2021 5:35 PM IST (Updated: 22 March 2021 5:35 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் குறும்படத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டார்.

திருவண்ணாமலை

சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "உன் மை யே வெல்லும்" என்ற தேர்தல் குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. 

இந்த குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப்நந்தூரி குறும்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் திரையிட்டு காட்டுவதற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சந்திரா, துணை கலெக்டர் (பயிற்சி) அஜிதாபேகம் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story