தூத்துக்குடி பகுதி வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


தூத்துக்குடி பகுதி வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 22 March 2021 6:52 PM IST (Updated: 22 March 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பகுதி வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி, டி.சவேரியார்புரம், தாளமுத்துநகர், ராஜபாளையம், அலங்காரத்தட்டு, சாமுவேல்புரம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின்போது வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜா, திருமணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story