சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி சந்திரபாடி மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதம்
சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி சந்திரபாடி மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
பொறையாறு:-
சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி சந்திரபாடி மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கிராம மக்கள் உண்ணாவிரதம்
தமிழகத்தில் கடலில் சுருக்குமடி, இரட்டைமடி ஆகிய வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அந்த வலைகளை பயன்படுத்த அனுமதி தர வேண்டும். சந்திரபாடி அருகே உள்ள இறால் பண்ணைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சந்திரபாடி மீனவ கிராம மக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையொட்டி அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து சந்திரபாடி மீனவ பஞ்சாயத்தார்கள் கூறுகையில், ‘அரசு சுருக்குமடிவலைக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவேற்றிய கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப்பெறவேண்டும். இப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
தேர்தல் புறக்கணிப்பு
இல்லை என்றால் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம். சுருக்குவலை பிரச்சினையில் ஏற்கனவே 9 மீனவ கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ள நிலையில் தற்போது 10-வது கிராமமாக சந்திரபாடி கிராமமும் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளது’ என்றனர்.
Related Tags :
Next Story