3 சட்டசபை தொகுதிகளில் 35 பேர் போட்டி
நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19 - ந் தேதி நிறைவடைந்தது. 20-ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடந்தது. இதில் நாகை சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க.கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி சிவசேனா மற்றும் சுயேச்சைகள் என 13 வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.
இதில் நேற்று யாரும் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. இதனால் நாகை சட்டசபை தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
35 வேட்பாளர்கள்
வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் உள்பட 15 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 3 பேர் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கீழ்வேளூர் (தனி) சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க., தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்புமனுக்கள் உள்பட 14 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் ஒரு சுயேச்சை உள்பட 4 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 35 வேட்பாளர்கள் தேர்தலில் களம் காண்கின்றனர்.
நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:
1.தங்க.கதிரவன் (அ.தி.மு.க.)
2. முகமது ஷா நவாஸ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
3.அகஸ்டின் அற்புதராஜ் (நாம் தமிழர் கட்சி)
4.மஞ்சுளா (அ.ம.மு.க.)
5.செய்யது அனஸ் (மக்கள் நீதி மய்யம் கட்சி)
6 சிங்கார வடிவேலன் (சிவசேனா கட்சி)
7.துரை (மக்களாட்சி கட்சி)
8. மயிலரசி (நாடாழும் மக்கள்கட்சி)
9.கனகராஜு (சுயேச்சை)
10. செல்வராஜ் (சுயேச்சை)
11. பாஸ்கரன்(சுயேச்சை)
12.பிரேம் (சுயேச்சை)
13. மணிகண்டன் (சுயேச்சை)
வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:-
1.ஓ.எஸ் மணியன் (அ.தி.மு.க.)
2.எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க.)
3.பி.எஸ்.ஆறுமுகம் (அ.ம.மு.க.)
4.ஆர்.பன்னீர்செல்வம் (பகுஜன் சமாஜ் கட்சி)
5.கு.ராஜேந்திரன் (நாம் தமிழர் கட்சி)
6. சுந்தரவடிவேலன் (சிவசேனா)
7.முகமது அலி (மக்கள் நீதி மய்யம் கட்சி)
8்.ராமமூர்த்தி (சுயேச்சை)
9.ராமஜெயம் (சுயேச்சை)
10.கதிர்வேல் (சுயேச்சை)
11.தீனதயாளன் (சுயேச்சை)
12.வீரக்குமார் (சுயேச்சை)
கீழ்வேளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:-
1. வடிவேல் ராவணன்(பா.ம.க.)
2.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி)
3.நீதி மோகன்(அ.ம.மு.க.)
4.டாக்டர் சித்து(மக்கள் நீதி மய்யம் கட்சி)
5.பொன்இளவழகி(நாம் தமிழர் கட்சி)
6.முத்தழகன்(புதிய தமிழகம் கட்சி)
7.தமிழரசன்(பகுஜன் சமாஜ் கட்சி)
8.கலைச்செல்வன்(சுயேச்சை)
9.வேத முகுந்தன்(சுயேச்சை)
10.மருதையன்(சுயேச்சை)
Related Tags :
Next Story