சின்னசேலம் அருகே வாக்குச்சாவடி மையங்களை காவல்துறை பார்வையாளர் ஆய்வு


சின்னசேலம் அருகே வாக்குச்சாவடி மையங்களை காவல்துறை பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 22 March 2021 10:31 PM IST (Updated: 22 March 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே வாக்குச்சாவடி மையங்களை காவல்துறை பார்வையாளர் ஆய்வு

சின்னசேலம்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் அருகே உள்ள தென்பொன்பரப்பி, அம்மையகரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை காவல்துறை பார்வையாளர் அனுராதாசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் உள்ளதா? என்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சாய்வு பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது சின்ன சேலம் தாசில்தார் விஜயபிரபாகரன், வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story