போலீசார் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
திருவாரூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடந்தது.
திருவாரூர்:
திருவாரூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடந்தது.
கொடி அணிவகுப்பு
திருவாரூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடந்தது. திருவாரூர் புதிய ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தா தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி முன்னிலை வகித்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கடமையாற்றும் வகையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நேர்மையான முறையில்
அந்தவகையில் அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடைபெறும் என்பதை வலியுறுத்தியும், பொதுமக்கள் அனைவரும் கையூட்டு பெறாது அச்சமின்றி, நேர்மையான முறையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த அணிவகுப்பு ரெயில் நிலையத்தில் தொடங்கி நேதாஜி சாலை, தெற்கு வீதி வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
இதில் உதவி கலெக்டர் பாலச்சந்திரன், தாசில்தார் நக்கீரன், துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், சலீம் ஜாவித், இன்ஸ்பெக்டர் ரமேஷ், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story