போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகள்
கூத்தாநல்லூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளால் விபத்து ஏற்படுகிறது. இதனை தடு்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளால் விபத்து ஏற்படுகிறது. இதனை தடு்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்துக்கு இ்டையூறாக
கூத்தாநல்லூர் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதனால் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் வளர்ப்போருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கூத்தாநல்லூர் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் சுற்றித்திரிகின்றன.
உயிர்சேதம் ஏற்படும் அபாயம்
மேலும் சாலையில் வாகன ஓட்டிகள் செல்லும் போது குறுக்கே குதிரைகள் நின்று கொண்டு இருப்பதாலும், நடுரோட்டில் படுத்து கிடப்பதாலும் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சில நேரங்களில் உயிர்சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது இடையூறாக உள்ள குதிரைகளால் உயிர்சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் உள்ளனர்.
அப்புறப்படுத்த வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது போல, உயிர்சேதம் ஏற்படும் முன்பு குதிரைகளையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story