வேலூர்; அச்சக உரிமையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
வேலூரில் அச்சக உரிமையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் மாவட்ட அச்சக உரிமையாளர் சங்கத்தினர் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர். மேலும் நேதாஜி மார்க்கெட் அருகே அச்சக உரிமையாளர்கள் திரண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு வேலூர் மாவட்ட அச்சக உரிமையாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணதிலக் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுரவ தலைவர்கள் சத்தியசீலன், ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் வணிகர் சங்க தலைவர் ஞானவேலு, இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அச்சகத்திற்கு தேவையான காகிதம், அட்டை, கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களை கார்ப்பரேட் கம்பெனிகள் பதுக்கி வைக்கின்றனர். எனவே அவற்றின் விலை உயர்கிறது. இதனை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
அவர்கள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. மூலப்பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story