நத்தக்காடையூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீழ்ப்பவானி பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நத்தக்காடையூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீழ்ப்பவானி பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம்,
நத்தக்காடையூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீழ்ப்பவானி பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி வாய்க்கால்
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர் கொள்ளளவு 105 அடி ஆகும். இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் நீலகிரி மாவட்டம், கேரள மாநில வனப்பகுதிக்குள் உள்ளன.
இந்த அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடியும், எண்ணெய் வித்துப்பயிர் சாகுபடியும் செய்யப்பட்டு வருகிறது.
கான்கிரீட் தளம்
இதன்படி ஒரு மதகில் தண்ணீர் திறக்கப்படும் காலகட்டத்தில் மண்ணாலான கால்வாய்களில் தண்ணீர் செல்லும் போது ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலம் மறைமுகமாக பாசனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் கீழ்பவானி கால்வாயில் நவீனப்படுத்துதல் என்ற திட்டத்தின் கீழ் ரூ.740 கோடியில் பொதுப்பணித்துறையின் மூலம் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நத்தக்காடையூர் அருகே முள்வாடிபாளையம் பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க தேவையான பொருட்கள் வைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், தமிழக கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கம், பாசன பயனாளிகள் மற்றும் விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் நேற்று காலை முள்வாடிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்ப்பவாணி பாசன நல சங்க செயலாளர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய பணிகள் தடைபடும்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் செ.நல்லசாமி பேசியதாவது:-
பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் முடியும் கரூர் மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி பகுதி வரை அதாவது 124 மைல் தூரத்திற்கு தமிழக அரசு கால்வாய் நவீனப்படுத்துதல் என்ற திட்டத்தின் மூலம் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கான்கிரீட் தளம் அமைப்பதற்கு முன்பு, இருபுறமும் உள்ள பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு, அங்கு வசிக்கும் பல்வேறு பறவை இனங்கள் அழிந்து விடும். மேலும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு மழைப்பொழிவு வளமும் குறையும் மேலும் கீழ்பவானி பாசன பகுதி பாலைவனமாக மாறி பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாய பணிகள் முற்றிலும் தடைபடும்.
மறியல் போராட்டம்
எனவே கான்கிரீட் தளம் அமைக்கும் திட்ட பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்கவேண்டும். மேலும் நாளை (புதன்கிழமை) காலை ஈரோடு மாவட்டம், காஞ்சிச்கோவில், ஆயப்பரப்பு, கருங்கரடு வாய்க்கால் பாலம் பகுதியில் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்ப்பவானி பாசன விவசாயிகள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story