வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,490 கிலோ குட்காபாக்கு, புைகயிலை பாக்கெட்டுகள், மினிலாரி பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,490 கிலோ குட்காபாக்கு, புைகயிலை பாக்கெட்டுகள், மினிலாரி பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2021 12:43 AM IST (Updated: 23 March 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,490 கிலோ குட்காபாக்கு, புைகயிலை பாக்கெட்டுகள், மினிலாரி பறிமுதல்

அரக்கோணம்

தக்கோலத்தை அடுத்த மாந்தோப்பு பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக இரவில் மினி லாரி வந்து செல்வதாக தக்கோலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தக்கோலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் சோதனைச் செய்தனர். வீட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 490 கிலோ எடையிலான குட்கா பாக்குகள், ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததும், அந்தப் பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
வீட்டின் உரிமையாளர் மாரிமங்கலத்தைச் சேர்ந்த கீதா என்பவர் ஆவார். குட்கா பாக்குகள், ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகள் கடத்தலில் ஈடுபட்டது கீதாவின் தம்பி செந்தில் எனத் தெரிய வந்தது. மினி லாரியின் டிரைவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கீதா, தம்பி செந்திலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story