மீனவர் வலையில் சிக்கிய ராட்சத மீன்


மீனவர் வலையில் சிக்கிய ராட்சத மீன்
x
தினத்தந்தி 23 March 2021 1:19 AM IST (Updated: 23 March 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத மீனை வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர்.

குளச்சல், 
குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத மீனை வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர்.
விசைப்படகு மீனவர்கள்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரை திரும்புவார்கள். அவர்களது வலையில் சிறியரக மீன்கள் சிக்கியிருக்கும். 
ஆனால், விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவார்கள். இவர்களது வலையில் பல உயரக மீன்கள் சிக்கியிருக்கும்.
225 கிலோ எடை
இந்தநிலையில் நேற்று கரை திரும்பிய ஒரு விசைப்படகில் ராட்சத கட்ட கொம்பன் மீன் பிடிப்பட்டு இருந்தது. அதை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்திற்கு எடுத்து சென்றனர். அந்த மீன் 225 எடை இருந்தது. துறைமுகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளும், சிறுவர்களும் ஆர்வமுடன் பார்த்தனர். தொடர்ந்து ஏலக்கூடத்தில் மீன் ஏலமிடப்பட்டது. அதை வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். இறுதியில் அந்த மீன் ரூ.15 ஆயிரத்துக்கு விலை போனது.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:- 
நாங்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது வலையில் ராட்சத கட்ட கொம்பன் மீன் சிக்கியது. அதை மிகவும் சிரமப்பட்டு படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தோம். இந்த மீனுக்கு கேரளாவில் மவுசு அதிகம். மேலும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story