வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் மறியல் போராட்டம்


வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 23 March 2021 1:37 AM IST (Updated: 23 March 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

திருமயம்,மார்ச்.23-
திருமயம் தகர கொட்டகை பகுதியில் நேற்று முன்தினம் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. இதை கிராம உதவியாளர் ரமேஷ் அகற்றிய போது, அவரை 5 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்யக்கோரி நேற்று திருமயம் அருகே பாம்பாற்று பாலத்தில் திருச்சி-காரைக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்யக்கோரி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலகண்ணன், திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி  மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கைது செய்யப்பட்டவரை விடுவிக்காவிட்டால் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று கூறி கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story