பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 23 March 2021 4:09 AM IST (Updated: 23 March 2021 4:09 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 
இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி விட்டு சுழற்சி முறையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மொத்தம் 6 சுற்றுகள் அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுவரை 3 சுற்றுகள் பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 4-வது சுற்று தண்ணீர் நேற்று காலை திறந்துவிடப்பட்டது. முதல்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் இது படிப்படியாக உயர்த்தப்பட்டு மாலையில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் குடிநீருக்காக அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 93.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,714 கன அடி தண்ணீர் வந்தது. 

Next Story