ஜலகண்டாபுரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஜலகண்டாபுரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேச்சேரி:
ஜலகண்டாபுரம் காமராஜர் சாலை 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் ரத்தினம் (வயது 54). தொழிலாளி. இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பக்கவாதம் நோய் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசோக் ரத்தினம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story