மேலும் 40 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சைக்காக திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 899ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 224ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 29பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, 270பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 18,405 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Related Tags :
Next Story