4 ஆடுகளை கடித்துக்கொன்ற செந்நாய்கள்
சேரம்பாடி அருகே 4 ஆடுகளை செந்நாய்கள் கடித்துக்கொன்றது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அருகே தியாகராஜ் என்பவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள புல்வெளியில் தியாகராஜ் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த செந்நாய் கூட்டம் ஆடுகளை துரத்தி துரத்தி கடித்து குதறின. இதை கண்ட தியாகராஜ் கூச்சலிட்டு செந்நாய்களை விரட்டினார். எனினும் 4 ஆடுகள் இறந்தன.
இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் செந்நாய்கள் மீண்டும் வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஏற்கனவே தியாகராஜின் 3 ஆடுகளை செந்நாய்கள் கடித்து கொன்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story