சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் 207 வேட்பாளர்கள் போட்டி


சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் 207 வேட்பாளர்கள் போட்டி
x
தினத்தந்தி 23 March 2021 5:11 AM IST (Updated: 23 March 2021 5:11 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 207 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 207 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி முடிவடைந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மொத்தம் 412 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இதில் 186 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 19 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து நேற்று இறுதி வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
எடப்பாடி தொகுதி
அதன்படி எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் சம்பத்குமாரும் போட்டியிடுகின்றனர்.
மேலும் அ.ம.மு.க. சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதிமய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா மற்றும் சுயேச்சைகள் உள்பட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  இதில் 20 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 28 பேர் களத்தில் உள்ளனர்.
சங்ககிரி தொகுதி
சங்ககிரி தொகுதியில் 23 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. சுந்தரராஜன் (அ.தி.மு.க.)
2. ராஜேஷ் (தி.மு.க.)
3. சிவலிங்கம் (தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி)
4. செங்கோடன் (மக்கள் நீதி மய்யம்)
5. செல்லமுத்து (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்)
6. சேட்டு (மை இந்தியா கட்சி)
7. ஷோபனா (நாம் தமிழர் கட்சி)
8. ரவிக்குமார் (இந்திய கண சங்கம் கட்சி)
 மற்றும் 15 சுயேச்சைகள் உள்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.
கெங்கவல்லி தொகுதி
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் 11 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. நல்லதம்பி (அ.தி.மு.க.)
2. ரேகா பிரியதர்ஷினி (தி.மு.க.)
3. செல்லம்மாள் (பகுஜன் சமாஜ் கட்சி)
4. நாவன் (புதிய தமிழகம் கட்சி)
5. பாண்டியன் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்)
6. பெரியசாமி (இந்திய ஜனநாயக கட்சி)
7.வினோதினி (நாம் தமிழர் கட்சி)
 மற்றும் 4 சுயேச்சைகள் உள்பட 11 பேர் போட்டியிடுகின்றனர்.
சேலம் வடக்கு தொகுதி
சேலம் வடக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. ஜி.வெங்கடாஜலம் (அ.தி.மு.க.)
2. வக்கீல் ராஜேந்திரன் (தி.மு.க.)
3. பன்னீர்செல்வம் (தேசிய மக்கள் கட்சி)
4. வேலன் (பகுஜன் சமாஜ் கட்சி)
5. அகமது ஷாஜஹான் என்கிற ஷாஜஹான் (எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி)
6. இமயஈஸ்வரன் (நாம் தமிழர் கட்சி)
7. குரு சக்ரவர்த்தி (மக்கள் நீதி மய்யம்)
8. நடராஜன் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்)
9. பாபு (மை இந்தியா பார்ட்டி)
10. முரளிதுரை (தேசிய மக்கள் கழகம்)
11.முருகன் (அம்பேத்கர் ரைட் பார்ட்டி ஆப் இந்தியா)
 மற்றும் சுயேச்சைகள் உள்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.
ஓமலூர் தொகுதி
ஓமலூர் தொகுதியில் 15 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. மணி (அ.தி.மு.க.)
2.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)
3.தாமஸ் (பகுஜன் சமாஜ் கட்சி)
4.கருணாகரன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)
5. சீனிவாசன் (மக்கள் நீதி மய்யம்)
6. திவ்யா (தேசிய மக்கள் கழகம்)
7.மாதேஸ்வரன் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்)
8.ராஜா அம்மையப்பன் (நாம் தமிழர் கட்சி)
 மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 பேர் களத்தில் உள்ளனர்.
ஏற்காடு தொகுதி
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் 13 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. சித்ரா (அ.தி.மு.க.)
2.தமிழ்செல்வன் (தி.மு.க.)
3, குமார் (தே.மு.தி.க.)
4. ராமசாமி (பகுஜன் சமாஜ் கட்சி)
5. துரைசாமி (இந்திய ஜனநாயக கட்சி)
6.ஜோதி (நாம் தமிழர் கட்சி)
 மற்றும் சுயேச்சைகள் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆத்தூர் தொகுதி
ஆத்தூர் தொகுதியில் 11 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1.ஜெயசங்கரன் (அ.தி.மு.க.)
2. சின்னதுரை (தி.மு.க.)
3. மாதேஸ்வரன் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்)
4. பெரியண்ணன் (பகுஜன் சமாஜ் கட்சி)
5. கிருஷ்ணவேணி (நாம் தமிழர் கட்சி)
6. சதாசிவம் (அம்பேத்கர் பார்ட்டி ஆப் இந்தியா)
7.சிவக்குமார் (சமத்துவ மக்கள் கட்சி)
8. மாதேஸ்வரி (அண்ணா திராவிடர் கழகம்)
9. ஜனார்த்தனம் (தேசிய மக்கள் கழகம்)
 மற்றும் 2 சுயேச்சைகள் என 11 பேர் களத்தில் உள்ளனர்.
வீரபாண்டி தொகுதி
வீரபாண்டி தொகுதியில் 20 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. ராஜமுத்து (அ.தி.மு.க.)
2.தருண் (தி.மு.க.)
3. சின்ணண்ணன் (பகுஜன் சமாஜ் கட்சி)
4. அமுதா (இந்திய ஜனநாயக கட்சி)
5. சத்தியவாணி (தேசிய மக்கள் கழகம்)
6. எஸ்.கே.செல்வம் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்)
7. பிரபாகரன் (வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி)
8.மணி (மை இந்தியா கட்சி)
9.மணிகண்டன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்)
10. மோகன் (சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆப் இந்தியா)
11. ராஜேஸ்குமார் (நாம் தமிழர் கட்சி)
மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சேலம் மேற்கு தொகுதி
சேலம் மேற்கு தொகுதியில் 28 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் (தி.மு.க.)
2. அருள் (பா.ம.க.)
3. அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.)
4. தமிழ்செல்வன் (பகுஜன் சமாஜ் கட்சி)
5. கதிர்வேல் (மை இந்தியா பார்டி)
6. கார்த்திகேயன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)
7. செந்தில்குமார் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)
8. தியாகராஜன் (மக்கள் நீதி மய்யம்)
9. நாகம்மாள் (நாம் தமிழர் கட்சி)
10. முத்துசாமி (தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி)
11. விஜயகுமார் (தேசிய மக்கள் கழகம்) மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
மேட்டூர் தொகுதி
மேட்டூர் தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
1. சீனிவாசபெருமாள் (தி.மு.க.)
2. சதாசிவம் (பா.ம.க.)
3. ரமேஷ்அரவிந்த் (தே.மு.தி.க.)
4. அனுசுயா (மக்கள்நீதிமய்யம்),
5. பானுப்பிரியா (இந்திய கணசங்கம்)
6. மணிகண்டன் (நாம் தமிழர் கட்சி),
7. ராசப்பன் (மை இந்தியாபார்ட்டி),
8. தங்கவேல் (தேசிய மக்கள் கழகம்).
  மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சேலம் தெற்கு
சேலம் தெற்கு தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.
1. பாலசுப்பிரமணியம் (அ.தி.மு.க.).
2. சரவணன் (தி.மு.க.).
3. வெங்கடாசலம் (அ.ம.மு.க.).
4. மணிகண்டன் (ம.நீ.ம.).
5. மாரியம்மாள் (நாம் தமிழர் கட்சி)
 மற்றும் சுயேச்சைகள் உள்பட 24 பேர் களத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Next Story