முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி


முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 23 March 2021 5:17 AM IST (Updated: 23 March 2021 5:17 AM IST)
t-max-icont-min-icon

கணியூர் பகுதியில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மடத்துக்குளம்
மடத்துக்குளம், கணியூர், ஜோத்தம்பட்டி, காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி, மைவாடி, கடத்தூர், வேடபட்டி, சோழமாதேவி ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் தொடங்கி 2021 தற்போது வரை, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் பொதுமக்கள் மத்தியில் 50 க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உடல் நலன் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நலன் கருதி, முதல்கட்டமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து தற்போது 2 ம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கணியூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் போடப்பட்டு வருகிறது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைகண்ணன், வட்டார சுகாதார ஆய்வாளர் பொன்ஆண்டவர் மற்றும் இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட முன் களப்பணியாளர்களுக்கு 2 ம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இவை தவிர கணியூர் மற்றும் மடத்துக்குளம் பகுதியில் தொடர்ந்து 2 ம் கட்டமாக, பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

Next Story