குப்பைத் தொட்டியில் கிடக்கும் சுகாதார பலகை
குப்பைத் தொட்டியில் கிடக்கும் சுகாதார பலகை
மடத்துக்குளம்
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பொது மக்கள் நலன் கருதி, சுகாதார விழிப்புணர்வு பலகையை ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மைவாடி ஊராட்சி பகுதியிலும், இதேபோல் பொதுமக்கள் நலன் கருதி சுகாதார விழிப்புணர்வு பலகை அமைக்கப்பபட்டு, அதில் சுகாதார நலன்களையும், சுகாதார சீர்கேடுகளில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துகொள்வதும் போன்ற படத்துடன் வாசகங்கள் அடங்கிய அரசின் விழிப்புணர்வு பலகை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் அவ்வழியாக உடுமலை, மடத்துக்குளம், கணியூர், ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் ஆகியோர் பார்த்து படித்து, பயன்பட்டு வந்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்ளாக இந்த சுகாதார விழிப்புணர்வு பலகை மைவாடி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடப்பது கண்டு இப்பகுதியில் உள்ள சுகாதாரத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி வரும் அபாய கட்டத்தில், இந்த குப்பைத் தொட்டியில் சாய்ந்து கிடக்கும், சுகாதார விழிப்புணர்வு பலகையை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் பாரபட்சமோ, அலட்சியமோ காட்டக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story